×

தெலங்கானாவில் 4 நாளில் தேர்தல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நலத்திட்டம்: தேர்தல் ஆணையம் அனுமதி

திருமலை: தெலங்கானா மாநில அரசு விவசாயிகளுக்கு முதலீட்டு தொகையாக ரைத்து பந்து திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிதி வழங்க அரசு திட்டமிட்டிருந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 30ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி உதவி வழங்காவிட்டால் விவசாயம் பாதிக்கும்.

எனவே ரைத்து பந்து திட்டத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க அனுமதிக்க வேண்டும் என பிஆர்எஸ் அரசு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வந்தனர். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தெலங்கானா மாநில அரசு ரைத்து பந்து நிதியை விவசாயிகளுக்கு வழங்க நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதனையடுத்து 28ம் தேதி மாலைக்குள் இந்த நிதியை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post தெலங்கானாவில் 4 நாளில் தேர்தல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நலத்திட்டம்: தேர்தல் ஆணையம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Telangana ,Election Commission ,Tirumala ,Telangana state government ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...